7 December 2011

என் காதல்....

 கண்ணுக்குள்... கண்ணீராக,
இதயத்தில்...துடிப்பாக,
உடம்பில்... உயிராக,
வாழுமே...!
என்னவளுக்கு  
தெரியாமலே...! 

எனக்குள் உள்ள
இனிய உறவு,
எனக்கு மட்டுமே..!

"காதல் கடலை விட
ஆழம்..!"
அதை அறிந்தும் ,
அறிவில்லாமல்..
கடலுக்குள் குதித்தேன்...
இப்போது தத்தளித்து
கொண்டிருக்கிறேன்.

என்னை கரை ஏற்ற,
அவளை  அழைக்கவில்லை,
என் உயிர் பிரிந்த பின்,
அவள் கண்ணில்
தேங்கும் ஒரு துளி
கண்ணீர் எனக்கு போதுமே..!

என் காதல்....
ஜெயிக்கவும் இல்லை..!
தோற்கவும் இல்லை..!
நான் இருக்கும் வரை....
என்னுள் என் மனதோடு
வாழுமே..!





No comments:

Post a Comment