12 December 2011

நானும் நிலவும்...

கிரகணம் என்று யாரோ சொல்ல கேட்டேன் ..!
உன் அழகை இன்று காணாமல் போவேனோ ...!
என் இரவு உன்னை காணாமல் போகுமோ.. !
தனியாக இன்று நாம் பேச முடியாதோ..!
என்னை காணாமல் நீ உறங்குவாயோ..!
உன்னை  காணாமல் நான்
உறங்குவேனோ..!

இத்தனை பயம் என்னில்.....
  சற்று முன் வரை.. ...
கிரகணம் முடிந்து நீ எனை ,
 காண வந்ததும் தான் தெரிந்தது...
  உன் முழு எழிலை காட்டத்தானோ..!

இதுவரை காணாத,
பேரழகியை கண்டேனே...
மொட்டை மாடியில்,
நான் கண்ட அழகியால் ..
என் உறக்கம் தொலைத்து நின்றேன் ..

நண்பா..
கொஞ்ச நேரம் நீயும்,
வெளியே வந்து பார்..!
உன் உறக்கத்தையும் தொலைத்து நிப்பாய் ..!
அவள் உன்னையும் வசிய வைப்பாள்.... !



  








No comments:

Post a Comment