20 October 2012

மறைப்பதும் மறப்பதும் ...

உன்னை சொந்தம்
கொள்ள நினைத்தேன் ...
கற்பனை மட்டும் ,
என் சொந்தமானது ...
காதலை சொல்லாமல்
போனது என் தவறே....
 நீ உணராமல் இருந்தால்
அது உன் தவறே...
மறப்பதும் , மறைப்பதும்
பெண்களின் சாபம்....!!!
நீ இல்லாமல் நான் இல்லை  ...
நான் இல்லாமல் நீ இல்லை ...
என்று வசனம் சொல்ல
விரும்பவில்லை......
மறைக்காமல் நான்  இருக்கிறேன்...
மறக்காமல்  நீ  இருந்தால்
போதும் எனக்கு....!!!

11 October 2012

அர்த்தமில்லாத அன்பில்.

அழ நினைத்தால் ,
கண்ணீரும் வர மறுக்கிறது ...!!!
என் மனதை வருத்த ,
அதற்கும் மனம் வர வில்லை ......!!!

என்னைச் சார்ந்தோரை விட ,
என் மேல் உள்ள
அர்த்தமில்லாத அன்பில்..!!!

12 June 2012

பிரிவு

அன்று .....
சின்ன சின்ன ,
பிரிவினை ஏற்க முடிந்தது...
அவள் எப்படியும்
 என்னை  சேர்வாள் என்ற
நம்பிக்கையில்....

இன்று ....
இப்பவும் அதே
நம்பிக்கையில் தான்..
அவளை பிரிந்தேன்....
என்  நம்பிக்கை....
 மூடநம்பிக்கை ஆனது...


2 April 2012

சட்டென்று விட முடியவில்லை ......

சட்டென்று...!
விட முடியவில்லை....
உன்னிடம் வாழ்ந்த ,
இனிய நாட்களை...!


நீ போன பின்பு  ,
மனசெல்லாம் நீ இருந்தும்,
உன் நிழல் தேடி
நான் அலைந்தேன் ...!

கண்ணிலும் அழவில்லை,
மனசுக்குள்ளும் அழவில்லை...
இருந்தும் என் மனம்
தவிக்குதடி .......

 தனிமையில் தவித்தேன்,
 பேசாமல் பேசினேன்,
 யாரும் உன்னை,
 தவறாக பேசாமல் இருக்க !


அம்மாவைத்   தவிர ,
வேறொரு  சாமியும்,
நான் கண்டதில்லையடி ....
உன்னிடம்  கண்டேனடி.....

உறக்கம் இல்லாமல் ,
என் இரவுகள்
போன போதும் ,
கனவுலகில்  திரிந்தேனடி ....

இதுவரை ..

என் வாழ்வில் ,
துணையாக இருந்தாய் ....!!!!
  " இனி என் ,
  வாழ்க்கைத்   துணைவியாக
   வருவாயா......?"

18 March 2012

எனது ஏக்கம்..!



ஏங்கினேன்!
எனை ஈன்ற தாய்
ஈரைந்து திங்களே,
 சுமந்ததால்  .....!

குறை தீர்த்தாள்!!!
 என் கல்லூரித் தாய்!!!

சுமந்தாள்...
எனை நான்கு வருடம்...!
மறவேன் .....
இனி என்றும் இவர்களை !

சுமப்பேன்....
 என் நெஞ்சில்..!
என்  சுவாசம்,
 உள்ள வரை....!!!

"மறுபிறவி உண்டோ?"
 நான் அறியேன்!!!

இருந்தால்...
 பிறப்பேன்...!!!

என்னிரு தாய்க்கும்
 மகனாய் 
மீண்டும்  ....!!!

22 February 2012

மறக்க முடியா தருணம்..
தவிர்க்க முடியா முடிவு ...
இன்று வரை கூடி  இருந்த மனம் ..

ஒரு சில வினாடிகள்,
தவித்து ஏங்கியது  ...

சிரிப்புகள் மலர்ந்தாலும்   ,
இதயத்தில் தவிப்புகள் தொடர்ந்தது ..!

பேசாமல் பேசும் கண்கள்
கவலையை மறந்து திரியும் கால்கள் ...

வகுப்பறையை மட்டும் பிரிந்தோம் ....
எங்கள் மனச்சிறையில்
என்றும் இணைந்திருப்போம் ....


  





 
   

28 January 2012

கனா காணும் காலங்கள் ..!

கனவுகள் கலைந்து,
கிடைத்ததை பெற்று,
தயக்கங்கள் நிறைந்து,
எங்கிருந்தோ
வந்தேன்...!

உடுமலைவாசி ...
மதராசி
ஆனேன்..!

பார்க்கும்
இடமெல்லாம் 
புதுமைதான் ....!

பார்க்காத
முகங்களை
 கண்டேன்..!

கற்றிடாத
 பாடமெல்லாம்
கற்றேன்..!


தொலைந்து
போன நான்கு
வருடம்..!

கண்ணிலேயே
நிற்கும் ஒவ்வொரு
தருணம்..!



ஒவ்வொரு
நிகழ்வுகளும்
கண் முன்னே  
துளிகளாய்  நின்றது..!

கண்ணீரில்
நான் கண்டது..!
கடந்த
நான்கு
வருடம் தான்..!

என்னை மீறின
கோபம்  ....
அதனால் ஏற்பட்ட
மனஸ்தாபம் ....
மன்னிப்பு கேட்க
நினைக்கும் மனம் ..!!

கணக்கிட
முடியவில்லை..!
நான் பட்ட
கஷ்டத்தையும்,
நஷ்டத்தையும்,
இஷ்டத்தையும் ..


நட்பில் பிறந்து ,
இதயத்தில் வளர்ந்து
நிற்கும் காதல் ..!
சொல்ல
நினைக்கும் உயிர் ...
ஆனால் , ஏற்க
மறுக்கும் மனம் ....

ஆஹா ..!
எத்தனை ,எத்தனை ,
வலிகள்...!


 மீண்டும்
திரும்பிடாதா  ...?
இந்த இனிய
 காலங்கள்...!!!

நினைவுகள் மட்டும்
கையில் இருக்க ,
விடைபெறும் நேரம்,
நெருங்கி வருகிறது ..!

மாற்றங்களால்
 மாற்றப்படும் ,
ஒரு சின்ன
பயணம் தானே...
இந்த கல்லூரியும் ..!

என்றும்
நினைவுகளை
மனதில் சுமந்த படி ..!

பயணிக்கிறேன் ...
உங்களுடன் சேர்ந்து..!
நானும்.......!













20 January 2012

காதல் காற்றே !!!

காதல் காற்றே !
காதல் காற்றே !
நான் சுவாசிக்க வேணாமா?

நின்னு போன ,
எந்தன் உலகம் ,
மீண்டும் இயங்க வேணாமா?

உன்னை எண்ணி,
ஏங்கும அவஸ்தை ,
என்னுள் தீர வேணாமா?

தீராத சோகம் ,
உந்தன் வருகையால் ,
மாய்ந்து போக  வேணாமா?

காதல் தீயில் ,
விழுந்த என்னை,
உன்னால் அணைக்க வேணாமா?

உந்தன் காதில் ,
எந்தன் உதடுகள்,
காதல் சொல்ல வேணாமா?

பொய்யான உலகம் ,
மெய்யான காதலை,
நம்மால் உணர்ந்திட வேணாமா?

அட!போதும்,
உந்தன் மௌனம் ,
என்னால் தாங்கிட முடியாது..!

புயலாய் அடித்தாலும்,
தென்றலாய் அணைத்தாலும்,
கவலை ஏதும் இல்லையே !!

அன்பே !!
வா... என்னில் ...! 
மறு ஜென்மமும் வேணாமே!!!

4 January 2012

அவளும்.. நானும் ..

கைகூடி சாலையில் ,
நடந்ததில்லை...
முனு,,, முனுன்னு ..
தொலைபேசியில் ,
பேசியதில்லை...
நிறமும் நிழலும் ,
ஒன்று இல்லை...
கண் இமைக்காமல்,
ஒருவரை ஒருவர் ,
பார்த்ததில்லை..
தோளோடு தோள் ,
சாய்ந்ததில்லை ..
கொண்டாடும் விழாவும் ,
ஒன்று சேர்ந்ததில்லை...
காதல் காமம்  ,
ரெண்டுமே இல்லை...
எனக்கு அவள்
ஒரு இம்மி கூட
பொருத்தமில்லை...
இருந்தும் ....
கனவும்     தவிப்பும் ...
கண்ணிலே குறைந்ததில்லை ...




3 January 2012

காதல் என்றால் ...

அவள் என்னை வெறுத்து,
மனமில்லா ஒருவனுக்கு
மனைவியாகி....
மகப்பேறு பெற்றாலும்....
நான் ...
அவளின் கண்ணீருக்கு...
கண்ணீர் விடுவேன்...